கீழே விழுந்து ஆளுநருக்கு தலையில் காயம்… அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை?
Author: Udayachandran RadhaKrishnan8 August 2025, 10:34 am
இன்று காலை ஆளுநர் திடீரென கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகாலாந்து ஆளுநராக உள்ளவர் இல.கணேசன். இன்று காலை தனது வீட்டில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை பிற்பகலுக்குள் அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
