கவர்னர் கருத்து சொன்னால் போராட்டம் செய்வார்களா..? கவலையே படமாட்டேன்… புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேச்சு..!!
Author: Babu Lakshmanan9 மே 2023, 4:49 மணி
தமிழகம் புதுச்சேரி என்று மக்களை பிரித்தாளவில்லை என்றும், போராட்டத்தை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான கருத்தை சொல்லுங்கள், எவ்வளவோ விமர்சனங்களை பார்த்து விட்டதாக புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
செஞ்சிலுவை சங்க தின விழா.துணைநிலை ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் கொண்டாடப்பட்டது. செஞ்சிலுவை சங்கத்திற்கான வெப்சைட் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இந்நிகழ்ச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பேசிய தமிழிசை தெலுங்கானாவில் 18 லட்சம் பேர் செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்துள்ளனர்.
அனைத்து பள்ளி கல்லூரிகளில் இளநிலை செஞ்சிலுவை உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். புதுச்சேரியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் 10 கோடி பேர் போதை பழக்கத்தில் உள்ளனர்.அவர்களை மீட்க செஞ்சிலுவை இருக்க வேண்டும். சேவை உள்ள இடங்களில் தமிழிசை இருப்பேன். ஆனால் நல்லது செய்தாலும் விமர்சனம் செய்கிறார்கள். எவ்வளவு பணிகள் இருந்தாலும் புதுச்சேரிக்கு தேவையானதை முழுமையாக செய்யப்படும், என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது :- ஜிப்மரும் மாநில அரசு மருத்துவமனைகளும் மக்களுக்கு சேவை செய்ய தான் உள்ளன. ஜிப்மரில் ஏழைகளுக்கு முற்றிலும் இலவசம். மற்றவர்களுக்கு அறிவித்த கட்டணத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன். பொது மக்களுக்கு இடையூறாக மருத்துவமனை முன் போராட்டம் நடத்த வேண்டாம் என்பது தான் எனது கருத்து. மருத்துவமனையை போராட்ட களமாக எம்பிக்கள் மாற்றக் கூடாது.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நீங்கள் உண்டியல் பொதுமக்களிடம் குலுக்கி விமானத்தில் என்னை அனுப்பவேண்டாம். ஏன் உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து வாங்கி கொடுங்க. ஆனால் நான் போக மாட்டேன். மக்கள் பயணிக்கும் விமானத்தில் தான் செல்வேன்.
தமிழகம், புதுச்சேரி என்று மக்களை நான் ஒருபோதும் பிரித்தாகவில்லை. அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்து வைக்க வேண்டும். எவ்வளவோ விமர்சனங்களை பார்த்து விட்டேன். அதை பத்தி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். ஐ டோன்ட் கேர், என்று தமிழிசை தெரிவித்தார்.
துணைநிலை ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி கேட்டதற்கு, இதற்கு பதில் அளித்து விட்டேன் இதை பற்றி பேச விரும்பவில்லை, என தெரிவித்தார்.
0
0