குடும்பத்துடன் திருப்பூர் வந்த ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் : குலதெய்வ கோவிலில் வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2021, 6:42 pm
Tamilisai - Updatenews360
Quick Share

திருப்பூர் : தெலங்கானா கவர்னர் பெருமாநல்லூர் குல தெய்வ கோயிலில் தனது குடும்பத்துடன் வழிபாடு நடத்தினார்.

தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை செளந்தரராஜன், திருப்பூரில் தனமு குல தெய்வ கோவிலுக்கு இன்று குடும்பத்துடன் வருகை தந்தார். இவரது குலதெய்வ கோயில், பெருமாநல்லூர் அடுத்த தட்டான்குட்டையில் அருள்மிகு மகா பெரியசாமி திருக்கோயில் உள்ளது.

நேற்று கோவை வந்த அவர், குல தெய்வ கோயிலில் தரிசனம் செய்தார். அவரை, மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், எஸ்.பி. சசாங் சாய் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து பாஜக மாநில பொது செயலாளர் ஜி.கே. செல்வக்குமார், மாநில செயலாளர் மலர்கொடி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாயிண்ட் மணி, பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், முன்னாள் தலைவர் சின்னசாமி, கோவை தெற்கு மாவட்ட தலைவர் நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்று அவருக்கு, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

தொடர்ந்து சிறப்பு பூஜையில் அவர், அவரது கணவர் செளந்தரராஜன் மற்றும் மகன் மற்றும் மருமகள் உட்பட குடும்பத்தினர் பங்கேற்றனர். கவர்னர் வருகையை ஒட்டி போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

Views: - 713

0

0