விபத்தை தவிர்க்க சாலையோர கடைக்குள் புகுந்த அரசு பேருந்து : அலறிய பயணிகள்… பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2023, 1:21 pm

செங்கோட்டையிலிருந்து திருப்பூர் நோக்கி 57 பயணிகளுடன் வந்த அரசு பேருந்தை ஓட்டுநர் சரவணன் (வயது 42) என்பவர் இயக்கி வந்தார்.

இந்த பேருந்து திருப்பூர் அருகே கோவில்வழி புதுரோடு பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது வலதுபுற சாலையில் இருந்து பொக்லின் வாகனம் ஒன்று திடிரென வந்துள்ளது.

பேருந்தை பொக்லின் மீது மோதாமல் தவிர்க்க ஓட்டுநர் சரவணன் இடது புறம் திருப்பி உள்ளார். இதில் சாலையோரம் இருந்த கடைக்குள் பேருந்து நுழைந்தது.

கடையின் முன்பு யாரும் இல்லாததாலும், பேருந்து மெதுவாக இயக்கப்பட்டதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பேருந்தில் பயணித்த 57 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

https://vimeo.com/838206896?share=copy

தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற நல்லூர் போலீசார் பணிகளை மீட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!