பள்ளி மாணவனை தொடர்ந்து ஆசிரியருக்கும் கொரோனா : அரசு பள்ளியில் அடுத்தடுத்து அதிர்ச்சி!!

23 January 2021, 3:46 pm
Salem Corona Teacher - Updatenews360
Quick Share

சேலம் : சேலத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனா முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளன, 10 மற்றும 12ஆம் வகுப்பு மாணவர்க மட்டும் பள்ளிக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கு வரும் மாணவ மாணிவகளுக்கு கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாணவிகளை ஓழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை ஒருவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

ஆசிரியருக்கு கெராரோனா தொற்று உறுதியானதால் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. சேலத்தில் மாணவியை தொடர்ந்து ஆசிரியைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 7

0

0