பேத்தி ஸ்தானத்தில் உள்ள சிறுமி பாலியல் பலாத்காரம் : கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோவில் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2021, 1:21 pm
Sex Harassed Arrest -Updatenews360
Quick Share

திருவள்ளூர் : செங்குன்றம் அருகே 13 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பிணி ஆக்கிய 58 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த விளாங்காடு பாக்கம் பெரிய தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 58). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் வீட்டின் அருகே வசித்து வரும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் தொந்தரவு செய்ததில் அந்த சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதனை அறிந்த அவருடைய உறவினர்கள் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

Views: - 281

0

0