‘வீட்டை தரை மட்டம் ஆக்கிட்டாங்க.. தெருவுல நிக்கிறேன்.’ : ஒரு மூதாட்டியின் கண்ணீர் கதை..!

3 September 2020, 7:12 pm
Cbe Shop - Updatenews360
Quick Share

கோவை : மளிகை கடையில் வைத்த கடன் பாக்கிக்காக வீட்டையே அபகரித்தாக மூதாட்டி ஒருவர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த முஸ்லீம் காலனியை சேர்ந்தவர் கண்ணம்மாள். 75 வயதான இந்த மூதாட்டியின் பேரில் இருந்த வீட்டை ஒருவர் இடித்துவிட்டதாக புகார் தெரிவிக்கிறார்.

தான் நிலத்தின் ஒரு பகுதியை அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அபகரித்துக்கொண்டு, குடியிருந்த வீட்டையும் இடித்து தள்ளிவிட்டதாக வேதனை தெரிவிக்கிறார் மூதாட்டி. இப்படி கண்ணம்மாள் நம்மிடம் தெரிவிக்க. அந்த வீதியே கண்ணம்மாளுக்கு நீதி வேண்டி நிற்கிறது என்பது தெரியவந்தது.

மளிகைக்கடையில் கடன் வைத்திருந்ததற்காகவும், சிறிது சிறிதாக வாங்கிய கடன்களுக்காகவும் எழுதப்படிக்க தெரியாத தனது தாய்க்கு சொந்தமான நிலத்தை அபகரிக்கத்து விட்டதாகவும், நியாயம் கேட்க சென்ற தன்னை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதாகவும் கூறி கண்ணீர் வடித்தார் மூதாட்டியின் மகள் ராணி.

அரசியல் செல்வாக்கு இருப்பதால் நிலத்தை அபகரித்தல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆறுமுகம் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினர் வழக்கறிஞர்கள்.

கணவனை இழந்து, பெற்ற மகளின் அறவனைப்பில் தஞ்சம் இருந்த இந்த மூதாட்டிக்கு மிஞ்சிய ஒரு வீட்டியையும் இடித்து தள்ளியதால் தவித்து வரும் இந்த மூதாட்டிக்கு காவல்துறையும், நீதித்துறையும் ஒரு சேர கருணை காட்ட வேண்டும் என்பதே மதுக்கரை வாசிகளின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.

Views: - 3

0

0