கொரோனா நிதியுடன் மளிகை பொருட்கள் : அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்!!

15 June 2021, 5:57 pm
Corona Fund - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் பகுதியில் கொரோனா நிவாரண நிதி, இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூரில், கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் துவக்கி வைத்தனர்.

கடந்த 25 நாட்களுக்கு முன்பாக முதல் தவணையாக 2,000 ரூபாயும் இன்று இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் பணம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.

இதுகுறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் நிவாரண நிதியாக மக்களுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என கழக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்பொருட்டு இன்று, மூலனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளாங்குண்டல், வடுகபட்டி, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், அரிசி அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக, 2000 ரூபாய் பணம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் நர்மதா, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணகுமார், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Views: - 290

0

0