பாஜக பிரமுகரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய மளிகை கடை வியாபாரி.. கோவையில் பகீர்!!
Author: Udayachandran RadhaKrishnan1 September 2025, 12:48 pm
கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க மண்டல துணைத் தலைவர் அஜய். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அங்கு பணியாற்றும் ஊழியர் அவரது மனைவியுடன் அஜய் மனைவி அடிக்கடி அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று வந்து உள்ளார்.
மேலும் மதமாறியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜய் அவரது மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மளிகை கடையில் புகையிலைப் பொருட்கள், போதை பொருள்கள் விற்பது குறித்து காவல் துறையினருக்கு அவ்வப்போது பா.ஜ.க பிரமுகர் அஜய் தகவல் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த மளிகை கடை ஊழியர் மற்றும் அவரது நண்பர்கள் நேற்று விளாங்குறிச்சி, பாலாஜி நகர் பகுதியில் பா.ஜ.க பிரமுகர் அஜயை வழிமறித்து தாக்குதல் நடத்தி கத்தியால் கையை வெட்டி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அஜயை அக்கம், பக்கத்தினர் மீட்டு சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவையில் பா.ஜ.க பிரமுகர் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
