திமுக அரசுக்கு பெருகும் எதிர்ப்பு.. அடைத்து வைக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் விடுவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2025, 6:49 pm

சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களான ராயபுரம், திரு.வி.க-வில் திடக்கழிவு தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைத்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இதுக்கு எதிர்ப்பு தெரிவித்த 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த 1-ம் தேதி ரிப்பன் மாளிகை முன்னாடி களமிறங்கி போராட்டத்தை ஆரம்பித்தனர்.

“எங்க கோரிக்கை நிறைவேறும் வரை விடமாட்டோம்!”னு கூறிய அவர்கள், நடைபாதையில் பந்தல் போட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

பல கட்டப் பேச்சுவார்த்தை நடந்தும், “போராட்டத்தை கைவிட மாட்டோம்!”னு தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டமாக கூறினர். இதனிடையே சென்னை ஐகோர்ட்டு, “சாலையை மறிச்சு போராட்டம் பண்ணுறவங்களை அப்புறப்படுத்துங்க”னு உத்தரவு போட்டனர்.

நள்ளிரவில் போலீஸ் அதிரடியா இறங்கி, பணியாளர்களை குண்டுக்கட்டா தூக்கி கைது பண்ணிடுச்சு. அப்போ காவலர்களுடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு என பரபரப்பானது.

கைது செய்யப்பட்டவர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை, வேளச்சேரி சமூக நல கூடங்களில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டுல தூய்மைப் பணியாளர்களோட வேலை பாதுகாப்பு, நலன் பத்தின பெரிய விவாதத்தை உருவாக்ககியது.

பல அரசியல் கட்சிகளும் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், 12 மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த 922 தூய்மைப் பணியாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!