மாஸ் காட்டிய தமிழன்.. வீழ்த்திய குகேஷ் : கடுப்பில் மேஜையை ஓங்கி குத்திய கார்ல்சன்… வைரலாகும் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan2 June 2025, 11:46 am
நம்பர் ஒன் வீரரான கார்ல்செனை உலக செஸ் சாம்பியன் குகேஷ் வீழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நார்வே கிளாசிக்கில் சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் உலக செஸ் சாம்பியனான இந்தியாவின் குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி பங்கேற்றனர்.
நார்வேயை சேர்ந்த 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் உட்பட 6 பேர் பங்கேற்றனர். நேற்று நடந்த போட்டியில் கார்ல்சனை எதிர்கொண்டார் குகேஷ்.
குகேஷை விட கார்ல்சன் ஆதிக்கம் செலத்திய நிலையில் சாமர்த்தியமாக விளையாடிய குகேஷ் இறுதியில் வெற்று பெற்று கார்ல்சனுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஆறாவது சுற்றில் குகேஷ் வெற்றியைடையும் போது, ஏமாற்றடைந்த கார்ல்சன் மேஜை மீது ஓங்கி குத்தி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சென்னை வீழ்த்தினார் உலக சாம்பியன் குகேஷ்
— UpdateNews360Tamil (@updatenewstamil) June 2, 2025
நார்வே செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் தோல்வியடைந்த கார்ல்சென் கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசமடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்#Trending | #chesschamps | #Gukesh | #ViralVideos | #updatenews360 pic.twitter.com/46tUAzakct
இந்த வெற்றி மூலம் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தோல்வியின் விளிம்பில் இருந்த குகேஷ், தொடர்ந்து போராடியதால் வெற்றி பெற்றுள்ளார். அவரின் திறமையை பாராட்ட வேண்டும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார் என பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.