நீ ரவுடி.. இனிமேல் உன் கூட சேரமாட்டேன்.. பேச மறுத்த நண்பனை வீடு புகுந்து வெட்டிய இளைஞர் மீது பாய்ந்தது குண்டாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2023, 1:42 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் வயது 18 என்ற இளைஞரை நள்ளிரவில் அவர் வீட்டின் முன்பு அவருடைய நண்பர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த திருவெண்ணைநல்லூர் போலீசார் அதே ஊரைச் சேர்ந்த மோகன்ராஜ்(21), கந்தசாமி(20) ஆகிய இருவரை தேடி வந்தனர்.

விசாரணையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் வீடு தேடி சென்று நண்பரையே வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

மேலும் கொலையாளி மோகன்ராஜ் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் இருந்ததால், ராமச்சந்திரன் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், கந்தசாமியுடன் சேர்ந்து ராமச்சந்திரனை அவரது வீட்டின் முன்பே வெட்டிக்கொலை செய்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மோகன் ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கடலூர் மத்திய சிறையில் உள்ள மோகன்ராஜ்(21) ஐ குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க காவல்துறை பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!