தட்டினால் தங்கம்.. வெட்டினால் வெள்ளி..வாயால் வடை சுட்டு ஆட்சியை பிடித்த திமுக : ஹெச் ராஜா விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2025, 2:42 pm

பொய்யை சொல்லி சொல்லி அண்ணா காலத்தில் இருந்தே திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாக ஹெச் ராஜா விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் 2021 தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்திருந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. திமுக அரசு எந்த கடனையும் இதுவரை தள்ளுபடி செய்யவில்லை மாறாக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளைத்தான் தள்ளுபடி செய்திருக்கிறது.

இதையும் படியுங்க : கர்ப்பிணினு சொல்லியும் விடல.. பாதிக்கப்பட்ட பெண் வேதனை பேட்டி!

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக எத்தனை பொய்களை வேண்டுமானாலும் சொல்லும். ஆட்சிக்கு வந்த பின்பு தேர்தலில் சொன்ன பொய்களை மறைக்க எத்தகைய பொய்களை வேண்டுமானாலும் சொல்லும்.

H Raja Damaged DMK Government

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த போலியான அரசியல் இயக்கம் திமுக. தட்டினால் தங்கம்! வெட்டினால் வெள்ளி! என வாயால் வடை சுட்டு வார்த்தை ஜாலங்களால் ஆட்சியை பிடித்த ஏமாற்றுப் பேர்வழிகள் தானே இந்த திராவிட மாடல் கும்பல்.

அண்ணாதுரை காலம் தொட்டே திமுக வரலாறு அப்படி!! என பதிவிட்டுள்ளார். இதற்கு ஹெச் ராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆதரவாளர்கள், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!