சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. மீண்டும் கோவை குற்றாலம் திறப்பு : ஆனா ஒரு கண்டிஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2021, 10:55 am
Covai Kutralam- Updatenews360
Quick Share

கோவை குற்றாலம், பூச்சமரத்துாரில், வரும், 6ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கிப்படுவர் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : காரமடை வனச்சரகம் பூச்சமரத்தூர் மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகம் கோவை குற்றாலம் சுற்றுலா பகுதிகள், அரசின் வழிகாட்டுதலின்படி, வரும், 6ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட உள்ளன.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூழல் சுற்றுலா செயல்படாது. பூச்சமரத்துாரில் ‘ஆன்லைன்’ முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.கோவை குற்றாலம் சுற்றுலா தளத்தில், காலை, 9:00 முதல் 9:30 வரை, 150 பேர், காலை, 10:30 முதல் 11:00 வரை, 150 பேர், பகல், 12:00 முதல் 12:30 வரை, 150 பேர், பகல், 1:30 முதல் 2:00 வரை, 150 பேர் என, ஒரு நாளுக்கு, மொத்தம், 600 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

கோவை குற்றாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிற 6ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட உள்ளன.

சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனை சான்று அல்லது இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்று வைத்திருக்க வேண்டும். www.coimbatorewilderness.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Views: - 396

0

0