ஹோட்டல் அறையில் உல்லாசம்.. வேலை முடிந்ததும் இளம்பெண்ணை 17 முறை கத்தியால் குத்திய ரகசிய காதலன்!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2025, 1:39 pm

ஹோட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து விட்டு பெண்ணை 17 முறை கத்தியால் குத்திய ரகசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவை சேர்ந்த தாசே கவுடாவுக்கு ஹரிணி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன், ஹரிணி வசித்த பகுதியில் நடந்த கண்காட்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு டெக்னீஷியனாக பணிபுரிந்த யஷாஸ் என்பவருடன் அறிமுகமாகி, தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து நட்பாக பேசியுள்ளனர்.

இதையும் படியுங்க: தலையெடுத்து பார்க்க முடியாத அளவு திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் : கவுதமி தடாலடி!

நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் ஊர் சுற்றியதுடன், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த விஷயம் கணவர் தாசே கவுடாவுக்கு தெரியவர, மனைவியை எச்சரித்துள்ளார்.

மேலும் செல்போனை பிடுங்கி வீசிவிட்டு, மனைவியை வீட்டுச் சிறையில் வைத்தார். இதையடுத்து வெகு மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த ஹரிணி, தனது கள்ளக்காதலன் யஷாஸ்சை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இருவரும் கடந்த 6ஆம் தேதி மீண்டும் சந்தித்தனர். பின்னர் ங்களூரு பூர்ணா பிரக்யா லேஅவுட்டில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

Having fun in a hotel room.. A secret lover stabbed a young woman 17 times!

பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்த யஷாஸ், ஹரிணியை 17 முறை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவானார்.

வெகுநேரமாக அறையில் இருந்து யாரும் வராததை கண்ட ஹோட்டல் ஊழியர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கூறி வரவழைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சுப்பிரமணியபுரா போலீசார், சடலமாக கிடந்த ஹரிணி உடலை மீட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பின்னர் யஷாஸை கைது செய்து விசாரித்ததில், ஹரிணி என்னை தவிர்த்ததால் கொலை செய்ததாக கூறினார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!