அவருக்கு தலைவர் பதவி வேண்டாம்.. நிர்வாகியாக இருப்பதே பெருமை.. அண்ணாமலையை புகழ்ந்த கோவை பாஜக பிரமுகர்!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2025, 11:16 am

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு பாஜக நிர்வாகி பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையும் படியுங்க: மனைவி தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்… நடுக்காட்டில் நடந்த மர்மம்..!!

இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து நாளை காலை பிறந்த நாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனை நடைபெற உள்ளது.

தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்குதல்,பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் ரத்த தானம் முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய பாஜக நிர்வாகி பாலாஜி உத்தம் ராமசாமி, பாஜக கட்சியில் அண்ணாமலை ஒரு நிர்வாகியாக பணியாற்றி வருவது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் அதே போல தொண்டனாக இருந்தாலும் பொதுமக்களுக்கு பல்வேறு நன்மைகளை அளித்து வருகிறார்.

He doesn't want the post of leader.. He is proud to be an administrator.. Coimbatore BJP leader praise

பாஜகவில் பணியாற்றுவதற்கு தலைவர் பதவி தேவை இல்லை என்றும் தொண்டனாக இருந்து பணியாற்ற முடியும் என்று பெருமிதம் கொண்டார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!