பொதுமக்களிடம் ரத்த மாதிரியை சேகரிக்கும் சுகாதாரத்துறை : உருமாறிய கொரோனாவை அறிய துரித நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2021, 2:16 pm
Corona test- Updatenews360
Quick Share

திருப்பூர் : உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், திருப்பூர் மாவட்டத்தில், நான்கு குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது.

திருப்பூர் உள்ளிட்ட பதினோரு மாவட்டங்கள் நோய் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

திருப்பூர் அனைத்து தரப்பினரும் வந்து செல்லக்கூடிய தொழில் சார்ந்த பகுதியாகும். ஆதலால் திருப்பூர் மாவட்டம் சுகாதாரத்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு குலுக்கல் முறையில் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்டோருக்கு இரத்தமாதிரி எடுக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறித்த பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாதிரிகள் அனைத்தும் கோவையிலுள்ள அரசு பரிசோதனை மையத்திற்கு அனுப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 322

0

0