மீண்டும் மருத்துவமனைகளாக மாறும் விடுதிகள்… சென்னையில் தயார் நிலையில் 11 படுக்கைகள் : ராதாகிருஷ்ணன் தகவல்

10 April 2021, 2:21 pm
radhakrishnan - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முன்பை விட கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 1,700க்கும் அதிகமான பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், சென்னையில் மட்டும் 500க்கும் கூடுதலாக உள்ளன. மேலும், கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 11 ஆயிரம்‌ படுக்கைகள்‌ தயார்‌ நிலையில்‌ வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த போது :- இந்திய அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பில் தமிழகத்தில் பாதிப்பு 3 சதவீதம்தான். சென்னையில் 15 மண்டலங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில்‌ மீண்டும்‌ தனிமைப்படுத்தும்‌ முகாம்கள்‌ திறக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் நடமாடும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா அறிகுறி தென்பட்டால்‌ உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்‌, என்றும்‌ வலியுறுத்தியுள்ளார்‌.

முன்னதாக, சென்னை அரசு மாணவர் விடுதிகள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 18

0

0