தமிழகத்தில் 1.49 லட்சம் ரெம்டெசிவர் ஊசி மருந்து கையிருப்பு : சுகாதாரத்துறை செயலர் தகவல்..!!!

14 April 2021, 6:16 pm
radhakrishnan - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் 1.49 லட்சம் ரெம்டெசிவர் ஊசி மருந்து கையிருப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முன்பை விட தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், கொரோனா தடுப்பூசியை தகுதியானவர்கள் முன்வந்து போட்டுக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டுள்ள

இந்த நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து, அவர் பேசியதாவது :- கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வாகனங்கள் 15 மண்டலங்களிலும் சுற்றி வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 27 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், மொத்தம் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.

கொரோனா தடுப்பூசியால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. தமிழகத்தில் 1.49 லட்சம் ரெம்டெசிவர் ஊசி மருந்து கையிருப்பு உள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம், என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Views: - 26

0

0