கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்…தமிழகத்திற்கு பெரும் சவால்: அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

Author: Aarthi
11 October 2020, 3:58 pm
minis vijaybaskar - updatenews360
Quick Share

மழைக்காலம் மற்றும் பண்டிகைக் காலம் தொடங்க உள்ள நிலையில் சவால் நிறைந்த காலகட்டமும் தொடங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: கொரோனாவை சிறப்பாக கையாண்டு பாராட்டு பெற்ற கேரளாவில், இப்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

மழைக்காலம் மற்றும் பண்டிகைக் காலம் தொடங்க உள்ள நிலையில் சவால் நிறைந்த காலகட்டமும் தொடங்குகிறது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பது தமிழகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Views: - 41

0

0