உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்… வயநாட்டு மக்களுக்காக தேனி இளைஞர்கள் செய்த செயல்!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2024, 10:43 am

இந்தியாவையே உலுக்கிய வயநாட்டு நிலச்சரிவு சம்பவத்தில் பல தன்னார்வ அமைப்புகள் தற்போது உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்

இந்நிலையில் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி கரம் நீட்டும் வண்ணமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறர் நலன் நாடும் தன்னார்வல அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், பெரியகுளம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி செய்யும் வண்ணமாக சிறியவர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உதவும் வண்ணம் ஆடைகள், அரிசி, பிஸ்கட், காய்கறிகள் மற்றும் போர்வை, துண்டு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திரட்டி வருகின்றனர்.

மேலும் பேருந்தில் செல்லும் பயணிகளிடமும், சாலையில் நடந்து செல்லும் மக்களிடமும், பேருந்துக்காக காத்திருக்கும் பொது மக்களிடமும் கேரளா வயநாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கொளுத்தும் வெயிலில் பொதுமக்களிடம் கையேந்தி நிவாரண பொருட்களை வழங்கிட கூறி நிதி திரட்டி வருகின்றனர்.

மேலும் திரட்டப்படும் பொருட்கள் மற்றும் நிதியை நாளை வயநாட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகளிடம் வழங்கி பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளதாக நிதி திரட்டி வரும் பிறர் நலன் நாடும் தன்னார்வல இளைஞர்கள் தெரிவித்தனர்.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?