தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Author: Aarthi Sivakumar
30 July 2021, 5:50 pm
rain alert - updatenews360
Quick Share

சென்னை: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் 3ம் தேதி வரை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இருசில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.

இன்றும் நாளையும் வடமேற்கு வங்க கடலுக்கு செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 206

0

0