கோவையில் ஒரு மணி நேரமாக பெய்த கனமழை : மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

22 January 2021, 9:51 am
Cbe Rain - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

கோவையில் கடந்த வாரம் வரை தினமும் லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வந்தது. இந்த சூழலில், இன்று காலை முதல் கோவையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், பீளமேடு, துடியலூர், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0