காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வலுக்கும் கனமழை…! காவிரியில் வினாடிக்கு 90,000 கனஅடி நீர் திறப்பு

7 August 2020, 9:22 pm
Quick Share

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 90,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

3 நாட்களாக கபினி அணையில் இருந்து 50,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. கேரளாவில் வயநாடு பகுதியில் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க ஆரம்பித்தது.

ஆகையால் கபினியில் இருந்து 60,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கேஆர்எஸ் அணையில் இருந்து தற்போது 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

குடகு, சிக்மங்களூர் போன்ற பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக 1 வாரத்தில் கேஆர்எஸ் அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. 124.8 அடி உயரம் கொண்ட  அந்த அணையில் தற்போதைய நிலவரப்படி 115 அடிக்கு நீர் இருப்பில் இருக்கிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கு 54,000 கனஅடி நீர்வரத்து உள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக 30,000 கனஅடி நீரை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.

தொடர்ந்து மழை நீடித்தால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு  நாளை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். கபினி, கேஆர்எஸ் ஆகிய 2 அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 90,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Views: - 6

0

0