இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: மீனவர்களுக்கும் எச்சரிக்கை…வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
4 October 2021, 12:31 pm
Quick Share

சென்னை: தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்து விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடற்பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Image

இதன் காரணமாக, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்கள், அரியலுார், பெரம்பலுார், கடலுார், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி,கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மத்திய அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் 7ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 219

0

0