தமிழகத்தை விடாத தொடர்மழை: 20 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..!!

Author: Aarthi Sivakumar
15 November 2021, 10:25 am
Quick Share

சென்னை: கன்னியாகுமரி உட்பட 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 18ம் தேதி கரையை நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட மாவட்டங்களில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இன்று மிக கன மழை பெய்யும்.

ஈரோடு, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், தர்மபுரி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Views: - 154

0

0