சென்னை மக்களே உஷார்…அடுத்த 3 மணி நேரத்திற்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை: வானிலை மையம் அலர்ட்..!!

Author: Aarthi Sivakumar
7 November 2021, 9:16 am
chennai rain
Quick Share

சென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

எழும்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, ஆவடி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்கிறது.

இந்நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை நீடிக்கும் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சென்னையில் பல இடங்களில் 10 செ.மீக்கு மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 16 செ.மீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Views: - 361

0

0