கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்.. இடுப்பளவு தண்ணீரால் மக்கள் அவதி : திடீர் சாலை மறியலால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2021, 10:52 am
Tirupur Rain -Updatenews360
Quick Share

திருப்பூர் : நள்ளிரவு பெய்த மழையால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் வீடு மற்றும் அரசு அலுவலகங்களில் மழைநீர் புகுந்தது.

ஏற்கனவே இப்பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததை மாநகராட்சியிடம் சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், நள்ளிரவு பெய்த மழையில், மழை நீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

இதனால் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கும் வரை தாங்கள் மறியல் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் மாநகராட்சிக்குட்பட்ட மும்மூர்த்தி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

Views: - 701

0

0