விழுப்புரத்தை உலுக்கிய பலத்த மழை : நீரில் மூழ்கி பயிர்கள் சேதம்!!

26 November 2020, 3:41 pm
Villupuram damages - Updatenews360
Quick Share

விழுப்புரம் : காற்றுடன் பெய்த கனமழை காரணமாக விழுப்புரத்தில் பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ள நிலையில் கரும்பு வாழை,நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

நிவர் புயல் இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கரையை கடந்தது. அதனை தொடர்ந்து பலத்த காற்றுடன் பெய்த கன மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம், கானை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கரும்பு, நெற்பயிர்கள், ஆகியவை மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது .

மேலும் வாழை காற்றில் சாய்ந்துள்ளது. மேலும் இந்த கன மழையின் காரணமாக தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது மரம் சாய்த்துள்ளது அதனை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் மழை வெள்ளத்தால் தத்தளிக்கிறது. கடல் அலைகளை கடலில் தான் பார்க்க முடியும். ஆனால் விழுப்புரம் பேருந்து நிலையம் வந்தாலே அந்த அலைகளை காண முடியும்.

மேலும் விழுப்புரம் உதவி வனப்பாதுகாவலர் அலுவலகங்கள் மழை வெள்ளத்தில் சூழுந்துள்ளது. அந்த நீரை மாவட்ட நிர்வாகம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 19

0

0