இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

Author: Prasad
19 June 2025, 1:24 pm

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால் வந்த லாரி மோதியதில் அச்சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவர்கள் பள்ளி செல்லும் வேளைகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது என கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், தற்போது கனரக வாகனங்களுக்கான நேரக்கட்டுப்பாடு குறித்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அதாவது காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும் அதே போல் காலை 4 மணியில் இருந்துஇரவு 8 மணி வரையிலும் பள்ளிகள் இயங்கி வரும் பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

heavy vehicles are not allowed in certain times in chennai

நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை உள்ளே அனுமதிக்க கூடாது, அதையும் மீறி அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது  தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!