ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி…நீர்வரத்து திடீரென உயர்வு: அருவியின் ரம்மியான காட்சி!!(வீடியோ)

Author: Rajesh
20 April 2022, 5:20 pm

தருமபுரி: ஒகேனக்கலில் திடீர் நீர்வரத்தால் நீர்வீழ்ச்சியில் ஆர்பரித்து கொண்டு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.


தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல். இங்கு தினந்தோறும் கர்நாடக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தருமபுரி மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. ஒகேனக்கல் பகுதிகளில் நேற்று திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

https://vimeo.com/701212664

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.


கடந்த சில தினங்களாக ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்த அளவே வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று 2 ஆயிரம் கனஅடி நீர் அதிகரித்து தற்போது 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் சினி பால்ஸ் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் அதிகரித்துக் கொட்டுகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?