ரிதன்யா தற்கொ** வழக்கில் பகீர் திருப்பம்… ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்!!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2025, 6:56 pm
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யா (27), திருமணமாகி 78-வது நாளில் வரதட்சணைக் கொடுமை காரணமாக ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில், கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, இவர்கள் மூவரும் காலை மற்றும் மாலை வேளைகளில் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
