பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மீது மீண்டும் புகார் மனு: கொலை மிரட்டல் வழக்கு பதிவுசெய்ய கோரிக்கை..!

6 November 2020, 5:02 pm
tharsan sanam - updatenews360
Quick Share

பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கில் 3 வாரத்திற்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்ற தர்ஷன் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் 3 வாரத்திற்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

sanam-updatenews360

சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய தர்ஷன் மீது சனம் அளித்த புகாரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் சனம் ஷெட்டி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனைதொடர்ந்து, தர்ஷன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் சனம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து 3 வாரத்திற்குள் பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், தர்ஷன் மீது பதிவான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்க செய்ய ஆணையிட்டுள்ளார்.

Views: - 38

0

0