சேவல் சண்டை நடத்தும்போது மட்டும் கொரோனா பரவாதா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan11 January 2022, 1:41 pm
தமிழகத்தில் ஜனவரி 25 வரை எந்த ஒரு சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.
ஜனவரி 25-ம் தேதி வரை இந்த ஒரு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது அரவக்குறிச்சி பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 25-ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன..? கொரோனா பவவல் அதிகரித்து வரும் நிலையில் எவ்வாறு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..? என கேள்வி எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே தேனி உத்தமபாளையம் பகுதியில் ஜனவரி 17ல் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. சேவல் சண்டையின் போது சேவலின் கால்களில் பிளேடு, கத்தி போன்றவற்றை கட்டக்கூடாது என்று நீதிபதி சுவாமிநாதன் அறிவுரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0