இந்து முன்னணி பிரமுகர் கொலை.. சட்டம் ஒழுங்கு எப்படி இருக்குனு பாருங்க.. விளாசிய வானதி சீனிவாசன்!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2025, 2:31 pm

கோவை, பீளமேட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

அதன் பிறகு அவர் நிருபர்களிடம் பேசும்போது : இன்று இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாள். 1974 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அதன் தீமைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் நெருக்கடியான அந்த காலகட்டத்தில் இந்திய ஜனநாயகம் எப்படி ? இருந்தது என்பது குறித்து இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவதற்காக இந்த கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

எமர்ஜென்சி காலத்தில் நாட்டின் ஜனநாயகம் செயல்படாமல் இருந்தது. இந்த நாட்டில் யாருக்கு உயர்ந்த அதிகாரம் என்பதில் அவ்வப் போது பிரச்சனைகள் இருந்து வருகிறது. 21 மாதம் நெருக்கடி நிலை இருந்தது. இதை எதிர்த்து போராடிய தியாகிகளை நாங்கள் நினைவு கூறுகிறோம்.

காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட குடும்பத்திடம் எப்போதும் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக செயல்பட்டது. அதற்கு மிகச் சரியான உதாரணம் இன்று தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து உள்ளது. ஆனால் அவசர நிலை காலகட்டத்தில் தான் இன்றைய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உட்பட தி.மு.க வினர் கொடுமைகளை அனுபவித்தார்கள்.

அரசியல் கட்சியினர் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள். எதற்காக நாங்கள் இதைச் சொல்கிறோம். கடந்த கால வரலாற்றில் மறக்கக் கூடாது. இதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை.

இது போன்ற நிகழ்வுகள் இனி நடத்தக் கூடாது என்பதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடத்துகிறோம்.

கல்வி பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது என்று தி.மு.க வினர் கூறுகிறார்கள். அது நெருக்கடி நிலை காலகட்டத்தில் தான். பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டார்கள. ஆனால் இன்று பாரதிய ஜனதா கட்சி மிகச் சிறந்த எடுத்துக் காட்டான அரசாங்க அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற அரசாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

ஆனால் ஸ்டாலின் நெருக்கடி நிலையில் பட்ட அனுபவங்களை மறந்து விட்டார். சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை அதற்கு உதாரணம். இன்று திருப்பூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை போய்க் கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் நெருக்கடி நிலை உள்ளதோ ? என்று எண்ணத் தோன்றுகிறது. நாங்கள் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டவரப்பட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் பதில் அளித்து உள்ளார்.

பாராளுமன்றத்தில் அவர்கள் கேட்ட போது கூட மத்திய அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார். தனது அரசின் தோல்விகளை மறைக்கவே தி.மு.க மத்திய அரசை குறை கூறுகிறார்கள். தமிழகத்தில் பல இடங்களில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. வகுப்பறைகள் வசதியில்லை.

மாணவிகளுக்கு கழிப்பிடம் இல்லை. மத்திய அரசு அனைவரும் ஒரே மாதிரியான கல்வி அறிவு பெற வேண்டும் என விரும்புகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில் கல்விக்கான அடிப்படை வசதியை அமைக்கவில்லை.

இப்போது தான் வட மாநிலங்கள் உட்பட பல இடங்களில் அடிப்படை வசதி ஏற்பட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்ட வில்லை.

தமிழை அதிகமாக கற்றுக் கொடுக்கக் கூடிய சூழ்நிலையை திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்.முருகன் மாநாட்டால் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை.

எப்போதும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்தே பேச வேண்டுமா. எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது. தி.மு.க ஆட்சி அகற்றப்படுவது உறுதி.

கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாக பேசி விட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க தான் தலைமை தாங்குகிறது.

தமிழ்நாட்டில் போதை பொருள் இளைஞர்கள் மத்தியில் தடுப்பதை தமிழக அரசு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்புடன் இதை முற்றிலும் அழிக்க வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி ராசா தரக்குறைவான விமர்சனத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!