பிரிட்டிஷ் ஆட்சியின் எச்சம்-னு இப்ப தெரியலயா..? இந்த மிரட்டல், உருட்டல் எல்லாம் இங்க வேணாம்.. திமுக மீது அர்ஜுன் சம்பத் பாய்ச்சல்!!

Author: Babu Lakshmanan
11 May 2023, 4:25 pm
Quick Share

பிரிட்டிஷ்காரர்களால் போடப்பட்ட எச்சம் பதவி என கனிமொழி எம்பி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எதிர்க்கட்சியாக இருந்த போது சட்டையை கிழித்துக்கொண்டு கவர்னர் மாளிகைக்கு ஓடி மனு கொடுக்கும் போது தெரியவில்லையா என இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொஞ்சம் கொஞ்சமாக நாடார் சமுதாயத்தின் பெயரிலே கிறிஸ்தவர்கள் நாடார்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்து மற்றும் சலுகைகளை கிறிஸ்தவ நாடார் என்ற ஜாதி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு இந்து நாடார்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக நாடார்கள் சிறுபான்மையினராக மாறி வருவதாக தெரிவித்தார். மதம் மாறி செல்பவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கூடாது இது குறித்து விரைவில் நீதிமன்றத்தை அணுக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வருகின்ற 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை 234 தொகுதிகளிலும் லஞ்ச ஊழலுக்கு எதிராக ஒலி எழுப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். பிடிஆர் குரல் பதிவு குறித்து உண்மை தன்மை கண்டறிந்து அதை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர், தமிழக அரசு கொண்டு வந்த நீர் நிலைகள் இயற்கை வள அழிப்பு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், என்றார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுமோசமாக உள்ளது என தெரிவித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்றார். ஹலால் முத்திரை தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட வேண்டும் தடை செய்யப்பட வேண்டும் என்றும், மதுரை சித்திரை திருவிழாவில் ஒரு அமைச்சர்கள் கூட பங்கேற்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், விழாவில் பட்டாகத்திகளுடன் ரவுடித்தனம் செய்து வியாபாரிகளை மிரட்டுவது நடைபெற்றது, என்றார். இது குறித்து எந்த கட்சியும் பேசவில்லை என தெரிவித்தார்.

தூத்துக்குடியில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்பி ஆளுநர் என்பது பிரிட்டிஷ்காரர்களால் போடப்பட்ட எச்சம் என பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எதிர்க்கட்சியாக இருந்த போது சட்டையை கிழித்துக்கொண்டு கவர்னர் மாளிகைக்கு ஓடி மனு கொடுக்கும் போது தெரியவில்லையா என அவர் கேள்வி எழுப்பினார். ஆளுநரை அவமதித்தால் அரசியல் சாசனத்தை போன்ற குற்றம் ஆழந்தர பேச்சாளரை விட்டு திட்டுவது இது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சாட்டர்ஜி என்றார். இவ்வாறு பேசுவோர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ராமனையும் சீதையையும் இழிவு படுத்த கூடிய வகையில் இயக்குனர் பா. ரஞ்சித்தினுடைய உதவி இயக்குனர் விடுதலை சிறப்பி எடுத்த ராவண கோட்டம் திரைப்படத்திற்கு அனைத்து தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டு படம் திரையிட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என பயந்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு இதுவே சாட்சி என்றார்.

Views: - 278

0

0