இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடல் நல்லடக்கம் : அஞ்சலி செலுத்திய பாஜக மூத்த தலைவர்கள்!!

Author: Udayachandran
1 October 2020, 3:52 pm
rama Gopalan - updatenews360
Quick Share

திருச்சி : உடல்நலக்குறைவால் காலமான இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன்(வயது 94) வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் இன்று காலை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்சி மாவட்டம் சீராதோப்பிற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும், இந்துமுன்னணி தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையொட்டி சீராதோப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் மறைந்த ராமகோபாலன் உடல் உறையூர் சீரா தோப்பில் உள்ள பாரதி வித்யாஷ்ரம் பள்ளியில் பொதுமக்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

அப்பகுதி முழுவதும் திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஹெச்.ராஜா பேட்டி

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் ஐயா அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா,பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் : தமிழகத்தில் இந்துக்களை யார் வேண்டுமானாலும் கொச்சைப்படுத்தலாம். ஏன் விநாயகர் சிலையை கூட உடைக்கலாம் என்கிற நிலை தமிழகத்தில் இருந்த போது இந்து சமூகத்தை தூக்கி நிறுத்தியவர் ராம கோபாலன்.

கன்னியாகுமரி மண்டைக்காடு பகுதியில் இரு காலகட்டத்தில் இந்து குழந்தைகள் பத்திரமாக வீட்டிற்கு வர முடியுமா ? என்கிற நிலை இருந்தது. ஆனால் அது போன்ற நிலை எல்லாம் இன்று இல்லை.

பொன். ராதாகிருஷ்ணன் புகழாரம்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலனுக்கு பொன் ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து முன்னனியின் தலைவர் ராமகோபலன் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். நாடு விடுதலை பெற்ற போது இரண்டு நாடாக இருக்கும் சூழல் இருந்தது.

இருப்பகுதியிலும் அளப்பரிய பிரச்சினைகளை சந்தித்த போது இந்து சமுதாயத்திற்கு உழைப்பதற்காக தான் வகித்த அரசு பதவியை விட்டு விட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்தவர் ராம கோபலன்.

பின்னர் 1980ல் இந்து முன்னணி அமைப்பை உருவாக்கி இந்துக்களுக்காக நான் இருக்கிறேன் என்று நின்றவர். அவருடன் நான் சுற்றுப்பயணம் செய்து இருக்கிறேன், என்னை ஒரு பேச்சாளராக, எழுத்தாளராக எதையும் எடுத்து செய்யும் திறமை மிக்கவனாக ஆக்கியவர் வீரத்துறவி ஐயா. கடந்த 40 ஆண்டுகளாக எனக்கு வழிகாட்டியாக இருந்தார். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. விருதுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் ராம கோபலன் அய்யா அவர்கள் என கூறினார்.

Views: - 91

0

0