இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு வாகனம் : கோவை ஆட்சியர் துவக்கி வைத்தார்!!
Author: Udayachandran RadhaKrishnan26 November 2021, 11:46 am
கோவை : கோவையில் வீடு தேடி கல்வித்திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வீடு தேடி கல்வித்திட்டத்தின் படி மாணவர்களுக்கு தவறான கல்வி முறையும், மதம் சார்ந்த கல்வி முறையும் கற்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் கட்சிகளும் கல்வி அமைப்புகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்
தமிழக முதலமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்ததும், திமுக கூட்டணி கட்சிகளே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அத்தகையை முறைகேடுகள் நடக்காது கல்வித்துறை தொடர்ந்து அறிவித்து வருகிறது.
மேலும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வீடு தேடி கல்வித்திட்டம் குறித்த புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கோவை மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய இந்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கிராமப்புறங்களுக்கு இந்த வாகனங்களிலும் செல்லும் 6 குழுக்களை சேர்ந்த கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே வீடு தேடி கல்வித்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0
0