மாணவியை கட்டிப்பிடித்து டார்ச்சர்.. ஆபாசமாக திட்டியும் மாணவிகளுக்கு தொந்தரவு ; கணித பாட ஆசிரியர் போக்சோவில் கைது..!!

Author: Babu Lakshmanan
22 August 2023, 4:24 pm

கிருஷ்ணகிரி அருகே மாணவ, மாணவியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஓசூர் அருகே உள்ள மோரணப்பள்ளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இரு பாலர் மாணவ மாணவியர்கள் படிக்கும் இந்த அரசு பள்ளியில் 1000க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் ஓசூர் குறிஞ்சி நகர் பேஸ் 16 பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜுலு (45) என்பவர் கணித பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 8, 9, 10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.

கணித ஆசிரியர் கோவிந்தராஜுலு கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் 6ம் வகுப்பு மாணவி ஒருவரை மைதானத்தில் விளையாடும்போது, பின்புறமாக கட்டிப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலர் ரகுராமனிடம் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய கணித பாட ஆசிரியர் கோவிந்தராஜுலுவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!