இட்லி வர தாமதானதால் ஆத்திரம்.. ஹோட்டல் கடை உரிமையாளரின் மண்டை உடைப்பு!
Author: Udayachandran RadhaKrishnan30 April 2025, 4:45 pm
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்
அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய மகன் கிருபானந்தன் நேற்று கடையில் இருந்துள்ளார்.
அப்போது கடையில் சாப்பிடுவதற்காக கணகசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மகன் ஜெயா சூரியா வந்துள்ளனர். அப்போது அவர்கள் இட்லி கேட்டுள்ளனர்.
இதையும் படியுங்க: குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!
உடனடியாக இட்லி தயாராக இல்லை என்பதால் தயாரானவுடன் கொடுக்கிறோம் என ஹோட்டல் உரிமையாளர் கிருபானந்தன் கூறியுள்ளனர். குடிபோதையில் இருந்த சுரேஷ் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் ஏன் தாமதமாக இட்லி கொடுக்கிறீர்கள்
என சமையலறைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது ஜெயா சூர்யா சாம்பார் வாளியால் அடித்ததில் ஹோட்டல் உரிமையாளர் கிருபானந்தன் என்பவருக்கு தலை, முகத்தில் காயம் ஏற்பட்டது.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிருபானந்தன் அனுமதிக்கப்பட்டுள்ள அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இந்த சம்பவம் குறித்து வேலூர் விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் மற்றும் அவரது மகன் ஜெய் சூர்யா ஆகிய வரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.