டிபன் வாங்குவதில் தகராறு : உணவக உரிமையாளரின் தம்பி அடித்துக்கொலை…!!

16 July 2021, 3:47 pm
thanjai murder - - updatenews360
Quick Share

தஞ்சாவூர் : உணவக உரிமையாளரின் தம்பியை, இளைஞர் அடித்து கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள கண்டியூரை சேர்ந்த சாலீப் என்பவர் அய்யம்பேட்டை மெயின் ரோட்டில் டிபன் கடை நடத்தி வருகிறார். எலக்ட்ரீசியனான அவரது தம்பி முகமது பாரூக், இரவு நேரத்தில் அவரது அண்ணனுக்கு உதவியாக கடையில் வேலை பார்ப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு கடையின் எதிரே உள்ள பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கண்டியூர் குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் இளையராஜா (32) என்பவர் சாலிப்பிடம் டிபன் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனைப் பார்த்த அவரது தம்பி முகமது பாரூக் இளையராஜாவை சமாதானம் செய்து அங்கிருந்து செல்லும்படி கூறி உள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த இளையராஜா அவர் கையில் கொண்டு வந்த கம்பியால் முகமது பாரூக் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சாலீப் கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைய ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 175

0

0