இளம்பெண்ணுக்கு வீட்டுக்காவல்.. அடைத்து வைத்து சித்ரவதை: 100க்கு பறந்த போன் கால்!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2025, 3:46 pm

கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் என்பவரது மகள் 23 வயதான சூர்யா இவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது ஹரிஹரன் என்பவரை காதலித்து வந்து உள்ளார்.

இதையும் படியுங்க: தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!

இருவரும் மேஜர் என்பதால் இருவரும் தங்கள் காதலை பெண்ணின் வீட்டில் வெளிப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் சூர்யாவின் தந்தை செல்வகுமார் காதலை ஏற்க மறுத்து உள்ளார். இதனால் சூர்யாவை துடியலூர் அதிர்ஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள உறவினர் சுப்ரமணியன் என்பரது வீட்டில் நான்கு நாட்களாக வீட்டில் சிறைபடுத்தி உள்ளதாக தெரியவந்து உள்ளது.

இந்நிலையில் வீட்டில் அடைபட்ட சூர்யாவின் மொபைல் போனை வாங்கி வைத்து விட்டு வெளி உலக தொடர்பின்றி வைத்து உள்ளதால் அவரை காதலித்து வந்த ஹரிஹரனுக்கு, சூர்யா உறவினரின் போனில் இருந்தே தகவல் கொடுத்து உள்ளார்.

இதனை அடுத்து காவல் துறையின் அவசர உதவி எண் 100 க்கு ஹரிஹரன் தகவல் கொடுத்து உள்ளார்.

House arrest for a young girl in love problem

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாக கூறி ஹரிஹரனின் வழக்கறிஞர் பெண்ணின் வீடியோவை எடுத்து வெளியிட்ட பிறகு காவல் துறையினர் உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்து, வீட்டில் சிறைவைக்கபப்ட்ட பெண் தரப்பினரையும் அப்பெண்ணின் காதலர் ஹரிஹரன் தரப்பினரையும் விசாரிக்க துடியலூர் காவல் நிலையம் அழைத்து செல்ல உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!