வீடு புகுந்து பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு : தேர்தல் முன் விரோதம் காரணமாக உறவினரே தாக்கியது அம்பலம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2023, 11:49 am

வீடு புகுந்து பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு : தேர்தல் முன் விரோதம் காரணமாக உறவினரே தாக்கியது அம்பலம்!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வேட்டைக்காரனிருப்பு வடக்கு சல்லிகுளத்தை சேர்ந்தவர் இளங்கோவன்.

பாஜக பிரமுகரான இவர் தேர்தல் முன் விரோதம் காரணமாக வீடு புகுந்து வெட்டியதில் படுகாயமடைந்த அவர் தற்போது நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேட்டைக்காரனிருப்பு உள்ளாட்சி இடைத் தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினருக்கு அதிமுக சார்பில் ரவிக்குமார் என்பவர் போட்டியிட்டுள்ளார்.

தேர்தலில் 30 லட்ச ரூபாயக்கு மேலாக செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக சார்பில் ரவிக்குமாரின் உறவினரான வீரக்குமார் என்பவரும் தேர்தலில் நின்றுள்ளார்.

இதனால் ரவிக்குமார் திமுக வேட்பாளர் நாகையன் என்பவரிடம் 26 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். பாஜக சார்பில் நின்ற வீரக்குமார் 83 வாக்குகள் பெற்றுள்ளார்.

வீரக்குமார் தேர்தலில் நின்றதால் தனது உறவினர்கள் ஓட்டு அவருக்கு சென்றதாலயே தான் தோற்றதற்கு காரணம் என இரு குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று பாஜக பிரமுகர் வீரக்குமார் வெளியூர் சென்ற நிலையில் அவரது அண்ணன் இளங்கோவை அதிமுக பிரமுகர் ரவிக்குமார் மற்றும் அவரது சகோதர்கள் ராஜகுமார், செல்வகுமார் சுதாகர் ஆகியோர் பாஜக பிரமுகர் இளங்கோ வீட்டிற்குள் புகுந்து வீட்டை அடித்து உடைத்து அவரை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இளங்கோ நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்ககொண்டு வருகின்றனர்

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?