மீண்டு வருவதற்குள் மின் கட்டண உயர்வு… எப்படி சமாளிக்க முடியும்? தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசைத்தறியாளர்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2022, 6:17 pm
Weavers Protest - Updatenews360
Quick Share

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழக அரசு சமீபத்தில் உயர்த்திய மின் கட்டணம் உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு , நூல் விலை பிரச்சனைகள் காரணமாக விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வரக்கூடிய சூழ்நிலையில் தமிழக அரசு 32 சதவீத மின் கட்டணம் உயர்வு அறிவித்துள்ளது.

இதனால் மீண்டும் விசைத்தறி தொழில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உடனடியாக தமிழக அரசு விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

Views: - 571

0

0