கொச்சி கப்பல் மூழ்கியதால் கடலில் மிகப்பெரிய அபாயம்.. கேரள மக்களுக்கு அரசு எச்சரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan26 May 2025, 3:35 pm
கேரளா கொச்சி கப்பலில் இருந்து விழுந்த கன்டெய்னர்கள் கொல்லம் மற்றும் ஆலப்புழா கடற்கரை ஓரங்களில் இதுவரை 15 கண்டெய்னர்கள் கரை ஒதுங்கி உள்ளது.
பெரும்பாலான கண்டெய்னர்கள் காலியாக இருந்திருக்கிறது. ஒரே ஒரு கண்டெய்னரில் மட்டும் கிரீன் டீ இருந்துள்ளது. கப்பலில் மொத்தம் 643 கண்டேனர்கள் இருந்துள்ளது.
இதையும் படியுங்க: 36 வருடமாக வெற்றி… தொகுதி மக்களுடன் வசிக்க புது வீடு கட்டி குடி புகுந்த முதலமைச்சர்..!!
இவற்றில் 73 கண்டெய்னர்கள் காலியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளதாகவும் 13 கண்டெய்னர்களில் மட்டுமே ஆபத்தான ரசாயன பொருட்கள் இருப்பதாகவும் அதில் முக்கியமானது கால்சியம் கார்போஹைட் உள்ளதால் தண்ணீரில் பட்டால் இவை வெடிக்கும் என்பதாலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

தற்போது கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் காலியாக இருந்தவை மட்டுமே கரை ஒதுங்கி வருவதாகவும் இவற்றை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.