பாதுகாப்பில்லாததே காரணமா? HM கூறுவது என்ன? அரசுப் பள்ளியில் மனிதக் கழிவு வீசிய சம்பவத்தில் பரபரப்பு!

Author: Hariharasudhan
30 January 2025, 1:45 pm

திருப்பூரில், அரசுப் பள்ளி வகுப்பறையில் மனித மலம் வீசப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை, சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலையில் வழக்கம்போல் 10ஆம் வகுப்புக்கான அறைக்கு மாணவர்கள் சென்றுள்ளனர்.

அப்போது, அங்குள்ள ஜன்னலிலும், மாணவர்கள் அமரும் இருக்கையிலும் மனிதக் கழிவுகள் வீசப்பட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்களின் உதவியுடன், மனிதக் கழிவை அப்புறப்படுத்திவிட்டு, ஆசிட் மற்றும் பினாயிலை ஊற்றிச் சுத்தப்படுத்தினர்.

இந்த நிலையில், இது குறித்து பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் தங்கவேல் கூறுகையில், “வழக்கம் போல் இன்றும் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது, மாணவ மாணவியர்கள், வகுப்பறைக்குள் மனித மலம் கிடப்பதாகவும், கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி, அலறியடித்து வகுப்பறையில் இருந்து வெளியேறினர்.

Human waste in School class in Palladam

தூய்மைப் பணியாளர் மூலம் வகுப்பறை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இருப்பினும், மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவர் என்பதால், வகுப்பறையைத் தற்காலிகமாக பூட்டி வைத்துள்ளோம். சமூக விரோதிகள் யாரோ இதனைச் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர்.. கோவையில் சினிமாவை மிஞ்சிய ஷாக் சம்பவம்!

மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், காமநாயக்கன்பாளையம் போலீசாரிடமும் இது குறித்து புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பல்லடம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் அண்ணாதுரை, “அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. காவலாளிகள் நியமிக்கப்படுவதில்லை. எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!