மனித நேய வார விழா : ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய இசைக்கருவிகள் இசைத்த பழங்குடியினர்!!

25 January 2021, 1:32 pm
tribals Fest - Updatenews360
Quick Share

கோவை : மனித நேய வார விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதி வாரம் மனித நேய வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, கோவையில் மனித நேய வார விழா இன்று துவங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது.

இதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய இசை கருவிகளை வாசித்தும், நடனமாடினும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி காண்போரை கவர்ந்தது.

Views: - 1

0

0