பள்ளத்தில் சிக்கி பசியால் தவித்த நாய்க்குட்டிகள் : மனிதம் சாகவில்லை என்பதை நிரூபித்த நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2022, 6:38 pm
Dog - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குளச்சலில் குழியில் விழுந்த குழந்தைகளை காப்பாற்ற போராடிய தாய் நாய்
7-குழந்தைகளை காப்பாற்றி உதவிய இளைஞர்களை குழந்தைகளுக்கு பாலூட்டியபடியே பாசத்தோடு பார்த்து நன்றி தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

பொதுவாக நாய் என்றால் எஜமானருக்கு நன்றியும் விசுவாசமிக்கது மட்டுமில்லாமல் எஜமானரையும் அவரை சார்ந்தவரையும் தாக்க வரும் எதிரியையும் துவம்சம் செய்து தனது நன்றியை வெளிப்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

அப்படிப்பட்ட நன்றிக்காக உழைத்த நாட்டு ரக நாய்கள் நடு ரோட்டில் நிற்பதும் தனது வாரிசுகளை காப்பாற்றுவதற்கு போராடுவதும் தற்போது வாடிக்கையான ஒன்று என்று சாமானியர்கள் மனித நேயமின்றி கடந்து செல்லும் நிலையில்

அதற்கு மாற்றாக நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் கழிவுகள் செல்லும் கழிவு நீர் ஓடை குழிக்குள் இன்று 7- சிறிய குட்டி நாய்கள் சிக்கி தவித்து உயிரிக்கு போராடியது.

அந்த நிலையில் அவைகளின் தாய் நாய் தனது குழந்தைகளை காப்பாற்ற போராடி முடியாத நிலையில் அந்த பகுதியை சுற்றி வரும் நபர்களிடம் தனது தாய்மொழியில் குரைத்து அங்கு நின்றோரிடம் உதவி கேட்டது.

யாரும் பொருட்பபடுத்தாத நிலையில் மீண்டும் குட்டிகளான குழந்தைகளை மீட்க போராடியது. ஆனால் முடியவில்லை. இதனால் செய்வதறியாது தாய் நாய் சுற்றி திரிந்த நிலையில்

இதைக்கண்ட அப்பகுதி வழியாக வந்த இளைஞர்கள் இரண்டு பேர் கழிவு நீர் ஓடையில் கிடந்த 7 நாய் குட்டிகளை மீட்டு கரையில் வைக்கவே தாய் நாய் ஓடோடி வந்து குழியில் சிக்கி பசியில் தவித்த குழந்தைகளுக்கு பாலூட்டியதோடு பாச குழந்தைகளை மீட்டு தந்த இளைஞர்களையும் பாசத்தோடு கண்ணீர் மல்க நன்றியோடு பார்த்தது,

இதை அப்பகுதியில் நின்ற மனிதமில்லாத சில நபர்கள் வீடியோவாக பதிவு செய்து அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட தற்போது இணையத்தில் வைரலாகி இளைஞர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது

Views: - 276

0

0