கொடைக்கானல் வனப்பகுதியில் கேளையாடு வேட்டை : பதப்படுத்திய இறைச்சியுடன் இளைஞர் கைது!!

8 July 2021, 6:16 pm
Muntjac Goat Hunting - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானல் வனப்பகுதியில் கேளையாடு வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த குருசாமி மகன் அந்தோணி (வயது 26) விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தை ஒட்டி வனப்பகுதியில் உள்ளது.

இந்த பகுதியில் அதிகமாக வனவிலங்குகள் உள்ளது. இவர் வனவிலங்கு பட்டியலில் மூன்றாவது இனத்தைச் சேர்ந்த கேளையாட்டை வேட்டையாடி அந்த கறியை பதப்படுத்தி வைத்துள்ளார்.

இதுபற்றி கொடைக்கானல் வனத் துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் செந்தில்குமார், வனவர் அழகுராஜா, கார்டு கிருபாகரன் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

இதில் அந்தோணி கேளையாட்டை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி வனத்துறை வழக்கு பதிவு செய்து வனவிலங்கு வேட்டையாடிய அந்தோணியை கைது செய்தனர். அவரிடமிருந்த கேளையாட்டின் கறியையும் பறிமுதல் செய்தனர்

Views: - 145

0

0