காதல் மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய கணவர் கைது

20 November 2020, 9:47 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வரதட்சிணை கேட்டு காதல் மனைவியை தலையணயில் அழுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகேயுள்ள தோனிரேவு  கிராமத்தைச் சேர்ந்தவர் நைனியப்பன். இவரது மகள்  சிவரஞ்சனி. இவருக்கும் காட்டாவூர்  பகுதியை சேர்ந்த ஓட்டுனரான பிரவீன் குமார் என்பவருக்கும் காதல் திருமணம் கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்த நிலையில் இருவரும் திருப்பாலைவனம் கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது மகளிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கணவர்  துன்புறுத்தி வந்ததாகவும்,  இதுகுறித்து அவரிடம்  சமரசம் மேற்கொண்டு வந்ததாகவும்,

தற்போது திடீரென அவரது வீட்டில் மர்மமான முறையில் சிவரஞ்சனி இறந்து கிடந்ததாகவும், இதனால் அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும், இதுகுறித்து அவரது கணவர் பிரவீன்குமாரிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு  வந்த நிலையில், அவரது கணவர் பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்,

முதலில் பாம்பு கடித்து இறந்ததாக கூறி நாடகமாடிய அவர் வரதட்சணை கேட்டும் குழந்தை இல்லாததாலும் தனது மனைவியை  தலையணை வைத்து முகத்தில் அழுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்ததை தொடர்ந்து, அவரிடம் மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் மனைவியை கொன்று கணவன் நாடகமாடி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0